Thursday, 27 February 2014

எனக்கு தெரிந்த கணினி குறிப்புகள்

1. உங்கள் கணினியில் நேரம் , காலம் தவறுதலாக இருந்தால் இணையத்தினுள் நுழைய எச்சரிக்கை காட்டும் உங்கள் கணினி .

2. சிமாஸ் பேட்டரி தான் கணினியின் நேரத்தையும் , கணினி யின் பாதுக்காப்பிற்க்கும் உதவுகிறது.

முக்கிய குறிப்பு :

உங்கள் கணினியின் கடவு சொல் மறந்து விட்டால் , நீங்கள் பயப்பட தேவை இல்லை . உங்கள் கணினியின் சிமாஸ் பேட்டரியை கழட்டி போட்டால் போதும் மீண்டும் திறந்து விடும் ........ அவ்ளோதான் 

Saturday, 22 February 2014

இசை கடவுள் இளையராஜாவும் கமலும்

எப்படி ஆரம்பிப்பது எற்று தெரியவில்லை அதனால் இதையே முதல் வரியாக கொண்டு ஆரம்பிக்கிறேன். தமிழ் பிழை இல்லாமல் எழுத கற்றுக் கொண்டு இருக்கிறேன் அதனால் தவறு வந்தால் மனிக்கவும் ..........

இன்றும் எனது அம்மா சமையல் வேளையில் மும்மரமாக இருந்தாலும் கமல் அவர்களின் பாடலோ படமோ தொலைகாட்சியில் ஓடினால் உடனே வந்து பார்ப்பார் ... என் அப்பா அம்மா எல்லோரும் கமல் ரசிகர்கள் தான்...... ஏன் என்று தான் புரியவில்லை 

Thursday, 20 February 2014

வந்தாச்சு வந்தாச்சு

ரொம்ப நாளைக்கு அப்புறம்   வந்து இருக்கேன். இந்த கொஞ்ச நாள் எங்க போச்சுன்னு தெரியல .... என் கதைய அப்புறம் பாத்துக்கலாம் ...


முதலில் உங்களுக்கு உதவும் ஒரு செய்தி .........

Youtube வீடியோவை எப்படி எளிதில் தரவிறக்கம் செய்வது ....

Thursday, 19 September 2013

பதில் சொன்னால் பணம் ?

நான் இங்கு கூற போகும் தளம் உண்மையானதா என்பதை கண்டறிய scamadvisor என்ற தளத்தில் பரிசோதித்து பார்க்கவும் ....

Tuesday, 23 July 2013

கணினி தொழில்கள்

உங்க கிட்ட கம்யூட்டர் இருக்கா அது போதும் வாங்க கடை போடலாம்...........
கூடவே ஒரு பிரிண்டர் வாங்குங்க .... அவளோதான் அந்த பிரிண்டர் ஜெராக்ஸ் எடுக்கற மாதிரி இருந்த இன்னும் சுகம் .  

நீங்க தொழிலதிபர் ஆயீட்டீங்க போங்க..

1. ஜெராக்ஸ்  எடுத்துக் குடுக்கலாம் ..

2. EB பில் கட்டித் தரலாம் (நீங்க சர்வீஸ் ஜார்ஜ் தொகைக்கு தகுந்த மாதிரி எடுத்துகோங்க இந்தியன் பேங்க் ல அக்கௌண்ட் இருந்த இன்னும் சவுரியம் அதுல தான் எதுக்கும் ஜார்ஜ் எடுக்க மாட்டங்க )

3. டிக்கெட் புக் பண்ணித் தரலாம் 

4. பட்டா சிட்டா எடுத்துக் கொடுக்கலாம் (1 க்கு 40 ரூ வாங்கலாம்  இதுதான் அதிகம் ஓடுது பாஸ் )

5.ஜாப் வொர்க் எல்லாம் பண்ணலாம் ...

6. ஸ்கூல் பசங்களுக்கு பிரிண்ட் அவுட் எடுத்து தரலாம் ... இப்ப எல்லாம் தினம் ஒரு டாபிக் எடுக்கறாங்க பசங்க...

7.பாட்டு பதிவு பண்ணிக் கொடுக்கலாம் 

8. வாக்காளர் அட்டைக்கு மற்றும் பாஸ்போர்ட் பதிவு பண்ணலாம் 

9.  TNPSC /TET இது போன்ற பல தேர்வுகளுக்கு பதிவு பண்ணலாம் 

10.வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு/புதுப்பித்தல் செய்யலாம்.

இன்னும் சொல்லறேன் ஒரு 50000 செலவு ஆகும் இதுக்கு எல்லாம் அப்பா காசுல பைக் வாங்கருக்கு இதை பண்ணி அப்பாக்கும் வாங்கி தரலாம் ....