Saturday, 22 February 2014

இசை கடவுள் இளையராஜாவும் கமலும்

எப்படி ஆரம்பிப்பது எற்று தெரியவில்லை அதனால் இதையே முதல் வரியாக கொண்டு ஆரம்பிக்கிறேன். தமிழ் பிழை இல்லாமல் எழுத கற்றுக் கொண்டு இருக்கிறேன் அதனால் தவறு வந்தால் மனிக்கவும் ..........

இன்றும் எனது அம்மா சமையல் வேளையில் மும்மரமாக இருந்தாலும் கமல் அவர்களின் பாடலோ படமோ தொலைகாட்சியில் ஓடினால் உடனே வந்து பார்ப்பார் ... என் அப்பா அம்மா எல்லோரும் கமல் ரசிகர்கள் தான்...... ஏன் என்று தான் புரியவில்லை 

கமல் மாதிரி யாருனால ஆட முடியும் ! அப்பவே பாரு எப்படி கலரு , அந்த சலங்கை ஒழி படத்துல ஒரு நாத்தம் புடிச்ச பேக் மாட்டிகிட்டு அந்த கெணத்து மேல ஆடுவாரு பாரு யாருனால முடியும். இது என் அம்மா . அவங்க சொல்லும் போதே அவங்க கண்ணும் , அவங்க முகமும் புதுசா இருக்கும் . 

தெனாலி படத்துல ஈழம் சம்பந்தமா பேசும் காட்சியில அவர் மட்டுமல்ல பார்க்கிற நம்மையும் அழ வைத்து விடுவார் . இவன் மட்டும் தான் இப்படி நடிக்கிறான் யாரவது இப்படி நடிக்கிறாங்களா னு எங்க அப்பா சொல்லுவார். இப்படி கமல் பத்தி சொல்லிகிட்டே இருக்கலாம்.

இந்த பாடலில் அவரின் நடிப்பை பாருங்கள்




இளையராஜாவும்=இசை கடவுள்

வேற என்னத்த சொல்ல ........

இந்த பாடல் நான் இதோடு 30 தடவை கேட்டு விட்டேன் அந்த குரலில் (ஜேசுதாஸ் ) உள்ள இனிமை அந்த இசையில் உள்ள தனிமையும் நான் என்ன சொன்னாலும் அது பத்தாது .. நீங்களே கேளுங்களேன் . 




2 comments:

  1. இளையராஜாவும் கமலும் தமிழையும் தமிழகத்தையும் பெருமைப்படுத்தியவர்கள்.

    இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸ் பாடல்கள் காலம் தோறும் போற்றப்படும்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. உங்களை போல் நானும் ரசிக்கிறேன்.... நன்றி அன்பரே

      Delete