Friday, 28 September 2012

லிபர்ட்டி ரிசர்வில் சேர்ந்த/சேமித்த பணத்தை எப்படி பெற்று கொள்வது?



டேட்டா என்ட்ரி வெப்சைட்டில் நீங்கள் சம்பாதித்த பணத்தை
ஒவ்வொரு திங்கட்கிழமையும் தவறாமல் உங்கள் லிபர்ட்டி
 ரிசர்வ் அக்கௌன்ட்டிற்கு அனுப்பி விடுவார்கள். 
டேட்டா என்ட்ரி வெப்சைட் குறித்த முந்திய பதிவிலேயே தெரிவித்திருந்தேன்.
 அதாவது நீங்கள் சம்பாதிக்கும் பணம் அமெரிக்க டாலர்களில் தான் இருக்கும்
 என்று. இனி உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட்டில் சேர்ந்த பணத்தை நீங்கள்
 எப்படி இந்திய ரூபாயாக பெற்று கொள்ளலாம் என்பது குறித்து பாப்போம்.


இன்றைய தினங்களில் சராசரியாக ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 50 -55 
இந்திய ரூபாய் வரை கணிக்கபடுகிறது. இதோ உங்கள் லிபர்ட்டி
 ரிசர்வ் கணக்கில் சேர்ந்த டாலர்களை netway  exchange என்ற இந்திய நிறுவனமிடம் ஒரு டாலர்க்கு 50 ரூபாய் என்ற கணக்கின் வீதம் இணையம் மூலமாகவே மாற்றி பெற்றும் கொள்ளலாம்.

தேவையானவை: ஒரு வங்கி கணக்கு, ஒரு லிபர்ட்டி ரிசர்வ் 
அக்கௌன்ட், netwayexchange.com என்ற தளத்தில் ஒரு அக்கௌன்ட்

குறிப்பு: படங்களை பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்.

Netway exchange தளம்
Netway exchange தளம்
முதலில் netwayexchange.com என்ற முகவரிக்கு சென்று ஒரு அக்கௌன்ட்
 பெற்று விடுங்கள் (இலவசம் தான்). பின்பு கீழே குறிப்பிட்ட படி செயல்படுங்கள்.
  • லாகின் செய்த உடன், ஒரு படிவம் தோன்றும். கீழுள்ள படத்தை பார்க்கவும். அதில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள sell என்ற பட்டனை அழுத்தவும்.
படிவம் 1
படிவம் 1
  • கீழுள்ள படத்தை போன்ற படிவம் தோன்றும். அதில் 
  • வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள "Add a bank account" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
படிவம் 2
படிவம் 2
  • உடனே, கீழுள்ள படத்தை போன்ற படிவம் தோன்றும். அதில்
  •  இங்கு குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்யவும்.
படிவம் 3
படிவம் 3
  1. Bank Name: உங்களது வங்கியின் பெயர்  (உதாரணத்திற்கு: State bank of India)
  2. Bank Branch: உங்கள் வங்கியின் கிளை (உதாரணத்திற்கு: Coimbatore - Gandhipuram)
  3. Account Holder Name: உங்கள் வங்கி கணக்கின் பெயர் (உதாரணத்திற்கு: Raman)
  4. Account Number : உங்கள் வங்கி கணக்கின் எண்
  5. Re-Enter Account Number : உங்கள் வங்கி கணக்கின் எண்
  6. Account Type: Savings (savings அக்கௌன்ட் ஆக இருந்தால்)
  7. IFSC code : ஒவ்வொரு வங்கிக்கும் IFSC நம்பர் என்ற எண் இருக்கும். அதனை இங்கு டைப் செய்து விடுங்கள்.
(உங்கள் வங்கியின் IFSC நம்பர்-ஐ அறிய www.ifsccodebank.com என்ற
 முகவரிக்கு செல்லவும்)
பூர்த்தி செய்து முடித்தவுடன் "Submit details" என்ற பட்டனை அழுத்தி விடுங்கள்.
  • இப்போது, படிவம் 2 மீண்டும் தோன்றும். கீழுள்ள படத்தை காண்க.
படிவம் 2 - மாற்றங்களுடன்
படிவம் 2 - மாற்றங்களுடன்
  • இனி கீழே குறிப்பிட்ட படி பூர்த்தி செய்யவும்.
  1. Select Currency: Liberty Reserve
  2. Account Number: உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட் நம்பர்
  3.  (உதாரணத்திற்கு U02456789)
  4. Account Name: உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் அக்கௌன்ட்டில் நீங்கள் கொடுத்த பெயர் (உதாரணத்திற்கு Kalaivaanan)
  5. Phone: உங்கள் போன் நம்பர்
  6. Email: உங்கள் ஈமெயில் முகவரி
  7. Select Your Bank for payment : நீங்கள் ஏற்கனவே படிவம் 3 மூலம் தெரிவித்த வங்கி கணக்கு - படத்தை பார்க்கவும்)
  8. Selling Amount: எவ்வளவு டாலர்களை ரூபாயாக மாற்றி பெற விரும்புகிறீர்களோ அதனை இங்கு தெரிவிக்கவும். (உதாரணத்திற்கு 5)
அதன் பின், place order என்ற பட்டனை அழுத்தி விடவும்.

  • உடனே ஒரு பக்கம் தோன்றும் அதில் Your Order Id is BNE671 என்று ஏதாவது கொடுத்திருப்பார்கள். அதனை குறிப்பு எடுத்து வைத்து கொள்ளவும். அதற்கு கீழேயே Enter the transaction Id என்ற கட்டம் இருக்கும். இந்த பேஜ் அப்படியே இருக்கட்டும்.
  • புதிதாக ஒரு விண்டோ ஓபன் செய்து, www.libertyreserve.com என்ற முகவரிக்கு சென்று லாகின் செய்து விடுங்கள். பின்பு, "Transfer" என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
லிபர்ட்டி ரிசர்வ் ட்ரான்ஸ்பர்
லிபர்ட்டி ரிசர்வ் ட்ரான்ஸ்பர்
  • உடனே கீழுள்ள படம் போன்ற படிவம் தோன்றும். அதை கீழே குறிப்பிட்ட படி பூர்த்தி செய்து விடவும்.

லிபர்ட்டி ரிசர்வ் ட்ரான்ஸ்பர்
லிபர்ட்டி ரிசர்வ் ட்ரான்ஸ்பர்
  1. Payment Mode:  Account
  2. Currency: USD 
  3. To Account: U4168389
  4. Amount: எவ்வளவு அமெரிக்க டாலர்களை ரூபாயாக மாற்றி பெற விரும்புகிறீர்களோ அதனை இங்கு தெரிவிக்கவும். (உதாரணத்திற்கு 5)
  5. Memo: நீங்கள் netwayexchange.com-இல், விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு Place order என்ற பட்டனை அழுத்தியவுடன் ஒரு பக்கம் தோன்றியது அல்லவா? அதில் Your Order Id is BNE671(உதாரணம்) என்று ஏதாவது கொடுத்திருப்பார்கள். அதனை இங்கு டைப் செய்யவும்.
  6. Private Payment: டிக் செய்ய வேண்டாம்.
  7. Master key: உங்கள் லிபர்ட்டி ரிசர்வ் மாஸ்டர் கீ. (ரெஜிஸ்டர் செய்யும் போது ஈமெயில் முகவரிக்கு லிபர்ட்டி ரிசர்வ் அனுப்பி இருக்கும்).
பூர்த்தி செய்தபின், preview என்ற பட்டனை அழுத்தி, Payment for services என்ற option-ஐ தேர்வு செய்துவிட்டு, சரியாகத்தான் பூர்த்தி செய்து இருக்கிறீர்களா என்பதை பார்த்துவிட்டு confirm என்ற பட்டனை அழுத்திவிடவும்.
  • உடனே கீழுள்ள படத்தை போன்ற பக்கம் தோன்றும். அதில் Batch என்று குறிப்பிட்டிருக்கும் code-ஐ குறிப்பு எடுத்து கொள்ளவும். (படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)
லிபர்ட்டி ரிசர்வ் batch code
லிபர்ட்டி ரிசர்வ் batch code

  • அந்த batch code-ஐ முன்பு netwayexchange.com-இல் Place order என்ற பட்டனை அழுத்தியவுடன் தோன்றிய பக்கத்தில், transaction id /batch id என்ற கட்டத்தில் டைப் செய்துவிட்டு submit பட்டனை அழுத்திவிடவும். தவறுதலாக அந்த பக்கத்தை மூடியிருந்தால், netwayexchange.com முகவரிக்கு சென்று, லாகின் செய்துவிட்டு , order history என்ற லின்கை அழுத்தி, sell என்ற option-ஐ தேர்வு செய்யுங்கள். அதில் நீங்கள் சமர்பித்த படிவம் பதிவாயிருக்கும். அங்கும், இந்த batch code-ஐ என்ட்டர் செய்து விடலாம்.
இவை எல்லாம் முடிந்த பின், உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் 1-2 மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்து விடும். இவை எல்லாம் பார்க்க பெரியவேலை போலதான் இருக்கும். ஆனால் ஒன்றுமே இல்லை. நேராக நீங்களாகவே செய்துபார்க்கும் போது நன்றாக புரிந்து கொள்வீர்கள்.

2 comments:

  1. இலங்கையில் இருப்பவர்கள் இந்த முறையினை பாவிக்க முடிமா?

    ReplyDelete
  2. கண்டிப்பாக முடியும்.......... என் தமிழ் புரிகிறதா? ( நீங்கள் பேசும் தமிழ் தான் சரியானது... "பாவிக்க முடியாதா" அழகான தமிழ்... நீங்கள் பேசும் போதுதான் தமிழின் இனிமையும் அதை இழந்த கவலையும் உணருகிறேன்)

    ReplyDelete